நமக்குள் இருப்பது அண்ணன், தம்பி பிரச்சனை தான் – அமைச்சர் வேலுமணி

நமக்குள் இருப்பது அண்ணன், தம்பி பிரச்சனை மட்டும் தான், ஒற்றுமையுடன் வேலை செய்ய வேண்டும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் வேலுமணி, நம் எதிரி திமுக தான், நமக்குள் இருப்பது அண்ணன், தம்பி பிரச்சனை மட்டும் தான். நாம் ஒற்றுமையுடன் வேலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர மக்கள் விரும்புவதால் அதற்கு நாம் பணியாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா சென்னை வந்துள்ள நிலையில், அமைச்சர் வேலுமணியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசப்படுகிறது.