சட்டசபை தேர்தலில் தனது பங்கு என்ன..? மு.க.அழகிரி பதில்..!
மதுரையில் மு.க.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர் வரும் சட்டசபை தேர்தலில் தனது பங்கு இருக்கும் என கூறியது குறித்து அவரிடம் கேள்வி கேட்டபோது, கட்சி ஆரம்பிப்பது, கூட்டணி அமைப்பது, வாக்களிப்பது கூட தேர்தல் பங்களிப்புதான். ஆதரவாளர்களுடன் எப்போது ஆலோசனை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறேன் என கூறினார்.
கட்சி தொடங்கும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து விட்டேன். வாய்ப்பு கொடுத்தால் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கலாம் என கூறினார். சமீபத்தில், மு.க அழகிரி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, புதிய கட்சி தொடர்பாக கேள்விக்கு போகப்போகத்தான் தெரியும். ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவை அறிவிப்பேன். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எனது பங்கு இருக்கும் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.