எது கலை, எது இலக்கியம் எதை மாணவர்கள் படிக்க வேண்டும் – கனிமொழி

ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம், எதை மாணவர்கள் படிக்க வேண்டும்.
அருந்ததிராய் எழுதிய “walking with comrades” என்ற புத்தகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏ.பி.வி.பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததிராய் எழுதிய இந்த புத்தகமானது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. இந்த புத்தகத்தில் நக்சலைட் குறித்த சர்ச்சையான கருத்துக்கள் இடம்பெற்றதால், பாடபுத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டதாக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து கனிமொழி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம், எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்து விடும்.’ என பதிவிட்டுள்ளார்.