கைவிரிப்பது போல் கண்ணீர் கடிதம் எழுதினால் நாங்கள் என்ன செய்வது? #சொல்போதாது EPS – உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இதன் தீவிரம் அதிகரித்து தான் உள்ளது. இதுவரை தமிழகத்தில் இந்த கொரோனா வைரஸால், 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘எதிர்க்கட்சி அஞ்சுகிறது’ என்றீர். ஆச்சர்யப்பட்டோம். ‘பணக்கார நோய்’ என்றீர். குழம்பினோம். ‘தனித்திரு-விழித்திரு-வீட்டிலிரு’ என்றீர். இருந்தோம். ‘3 நாளில் காணாமல் போகும்’ என்றீர். காத்திருந்தோம். இன்றோ, கைவிரிப்பது போல் கண்ணீர் கடிதம் எழுதினால் நாங்கள் என்ன செய்வது? #சொல்போதாது eps.’ என பதிவிட்டுள்ளார்.
‘எதிர்க்கட்சி அஞ்சுகிறது’ என்றீர். ஆச்சர்யப்பட்டோம். ‘பணக்கார நோய்’ என்றீர். குழம்பினோம். ‘தனித்திரு-விழித்திரு-வீட்டிலிரு’ என்றீர். இருந்தோம். ‘3 நாளில் காணாமல் போகும்’ என்றீர். காத்திருந்தோம். இன்றோ, கைவிரிப்பது போல் கண்ணீர் கடிதம் எழுதினால் நாங்கள் என்ன செய்வது? #சொல்போதாதுEPS
— Udhay (@Udhaystalin) June 8, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025