பாஜக பற்றி நான் கூறிய கருத்து எனது சொந்த கருத்து என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம். பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் சிறுபான்மையினர் நமக்கு வாக்களித்திருப்பார்கள் என்றும் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பதில் கருத்து கூறிய தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி ராகவன், சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு அதிமுக எடுத்த சில தவறான முடிவுகளே காரணம் என்றும் பாஜகவால் சிறுபான்மையின வாக்குகள் கிடைக்கவில்லை என்ற சிவி சண்முகத்தின் கருத்து ஏற்புடையதல்ல என மாறி மாறி குற்றசாட்டி கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியது.
இதனையடுத்து, அதிமுக ஒருங்கிணையாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில், சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி தொடர உறுதுணையாக இருப்போம் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், பாஜக பற்றி நான் கூறிய கருத்து எனது சொந்த கருத்து என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்னிடம் கேட்கும் போதும் எனது சொந்த கருத்தே என்றே நான் தெரிவித்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, திமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா என்ற கருத்தை நான் கூற முடியாது என்றும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கும்போது கூட்டணி நிலை குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் எனவும் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். மேலும் பாஜகவை பற்றி அதிமுக நிர்வாகி கூட்டத்தில் சிவி சண்முகம் பேசியது அதிகாரப்பூர்வ கருத்தல்ல, உட்கட்சி கூட்டத்தில் பேசியுள்ளார் என குறிப்பிட்டிருந்தார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…