நீங்கள் பத்து வருடமாக ஆட்சியிலிருந்து என்ன கிழித்துள்ளீர்கள்? ஆதாரம் இல்லாமல் எதையும் பேசமாட்டேன் – மு.க.ஸ்டாலின்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
எடப்பாடி பழனிசாமியை பார்த்து கேட்கிறேன், நீங்கள் பத்து வருடமாக ஆட்சியிலிருந்து என்ன கிழித்துள்ளீர்கள்?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் 6 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் விஜய் வசந்த் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களோடு மக்களாக இருக்கக்கூடிய இயக்கம். நான் படிப்படியாக வளர்ந்து வந்தவன். எடப்பாடி ஊர்ந்து ஊர்ந்து வளர்ந்து வந்தவர்.
அதிமுக ஆட்சியில் இருந்த கடந்த 10 ஆண்டுகளில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை. எனக்கு வரலாறு உண்டு. நான் கலைஞரின் மகன், ஆதலால் ஆதாரம் இல்லாமல் எதையும் பேச மாட்டேன். எடப்பாடி பழனிசாமியை பார்த்து கேட்கிறேன், நீங்கள் பத்து வருடமாக ஆட்சியிலிருந்து என்ன கிழித்துள்ளீர்கள்? எனக் எழுப்பியுள்ளார்.