குடித்துவிட்டு தம்பியிடம் தகராறு செய்த அண்ணன்..! தம்பி கொலை நடந்தது என்ன..?
தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருக்கும் அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னை எம்கேபி நகரை சேர்ந்தவர் ஜான்சன் 38 வயதான இவருக்கு ஜான் என்ற ஒரு தம்பி உள்ளார் ,ஜான் கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் ,மேலும் அவருடைய அண்ணன் ஜான்சன் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார் .
இந்த நிலையில் ஜான்சன் குடித்துவிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் தம்பி என்று கூட பார்க்காமல் ஜானிடம் தகராறு செய்தார், வாக்குவாதம் அதிகமானதால் கம்பியால் ஜான்சன் ஜானை பலமாக தாக்கினார் இதில் பலத்த காயம் அடைந்த ஜான் தாண்டி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மருத்துவனைக்கு சென்று அங்க காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போட்டு வீடு திரும்பினார், நேற்று வீடு திரும்பி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார் , மேலும் இதுகுறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் ஜான் அண்ணன் ஜான்சனை தேடி வருகின்றார்கள்.