ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? – சீமான்
ராஜீவ் காந்தி ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை செய்துள்ளார் என சீமான் பேட்டி.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் பணி நிரந்தரம் கோரி இன்று 6வது நாளாக தொடர்ந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில், 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பட்டினப்பாக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்து கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ராஜிவ் காந்தி வழக்கில் வெற்றியை பெற்றது பேரறிவாளன் தான், அவரே சட்டங்களை படித்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து இந்த வழக்கை முடித்து வென்றுள்ளார். மற்ற யாரும் இதற்கு காரணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை செய்துள்ளார். ராகுல் காந்தி தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை மன்னித்துவிட்டேன் என்று தெரிவித்தார்; ஆனால் அவர் யார் எங்களை மன்னிக்க? நாங்கள்தான் உங்களை மன்னித்தோம் என தெரிவித்துள்ளார்.