நவராத்திரிக்கு ஒன்பது நிற உடையில் வரவேண்டுமென யூனியன் பாங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் சுற்றறிக்கைக்கு சு.வெங்கடேசன் கண்டனம்.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது நிற உடைகளில் வர வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பி இருப்பதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நவராத்திரிக்கு ஒன்பது நிற உடையில் வா! உள்ளாவிட்டால் தண்டம் கட்டு. இது என்ன அரசு வங்கியா? இல்லை அதிகாரி வீட்டின் பூஜை அறையா? என கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், யூனியன் பாங்க் ஆப் இந்தியா அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் ஏ.ஆர் ராகவேந்திரா என்பவர் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது நிற உடைகளில் வர வேண்டுமென ஒரு சுற்றறிக்கையை கடந்த 1ம் தேதி வெளியிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் உடை கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டுமாம், விடுமுறை நாளாக இருந்தாலும், யார் இவருக்கு அதிகாரம் தந்தது. ஊழியரின் விதி முறைகளில் எந்த சரத்தின் கீழ் இந்த சுற்றறிக்கையை அவர் விடுத்துள்ளார்?.
நவராத்திரியை நம்பிக்கை உள்ளவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். அது அவர்களின் விருப்பம். தனிப்பட்ட உரிமை. ஆனால், எல்லாரும் கொண்டாடியாக வேண்டும், இன்ன நிறத்தில் உடை உடுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது அதிகார மீறல்,அடுத்தவரின் உரிமைகளில் தலையிடுகிற அத்து மீறல். நிதி அமைச்சகம், யூனியன் வங்கி சேர்மன் உடனடியாக இதில் தலையிட வேண்டும். உடனடியாக சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…