பொருளாதாரத்தை 12 சதவீதமாக்க பிரதமர் மோடி என்னமந்திரம் வைத்திருக்கிறார்?கே.எஸ்.அழகிரி
ஓலா,உபர் வாடகை கார்கள் பயன்பாட்டால் வாகன உற்பத்தி குறைவு என்பது திசைதிருப்பும் முயற்சியாகும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் அதள பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட வேண்டும். pic.twitter.com/GpYAaqcZeX
— KS_Alagiri (@KS_Alagiri) September 11, 2019
இந்திய பொருளாதார மந்த நிலை குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், இந்திய பொருளாதாரத்தை 12 சதவீதமாக்க பிரதமர் மோடி என்னமந்திரம் வைத்திருக்கிறார்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .
ஓலா,உபர் வாடகை கார்கள் பயன்பாட்டால் வாகன உற்பத்தி குறைவு என்பது திசைதிருப்பும் முயற்சியாகும் .பொருளாதார மந்தநிலையை தடுக்கும் முயற்சிகளில் நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் ஈடுபடவேண்டும் என்று கே.எஸ்.அழகிரி அறிக்கையில் தெரிவித்துள்ளார்