தினகரனிடம் பொட்டிப்பாம்பாக நான் அடங்க அவர் எனக்கு என்ன சோறா போடுகிறார்? என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இடையே மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
வெளியான அந்த ஆடியோவில் ,டிடிவி தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்தார்.டிடிவி தினகரன், கட்சியை பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம் அளித்தார்.அதில், கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன்? என்றும் என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள் என்றும் பேசினார்.
தினகரனை விமர்சித்து தங்க தமிழ்செல்வன் பேசியதாக ஆடியோ வெளியான நிலையில் தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் வைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,ரேடியோவில் கொடுத்த பேட்டி தொடர்பாக தங்க தமிழ்செல்வன் என்னிடம் விளக்கம் அளித்தார், இது குறித்து அவரை எச்சரித்தேன்.ஊடகங்களிடம் ஒழுங்காக பேசவில்லை என்றால் செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர் பதவிலிருந்து நீக்குவேன் என்றேன்.தங்க தமிழ்செல்வனை நீக்க அச்சமோ, தயக்கமோ இல்லை.அவர் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பொட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், நான் உண்மை பேசியதால் என்னை ஊடகங்கள் பெரிதுப்படுத்தின.எனது அடுத்த கட்ட நடவடிக்கை அமைதியாக இருப்பதுதான் ஊடகங்களில் அரசியல் விமர்சகராக வருவேன்.தினகரனிடம் பொட்டிப்பாம்பாக நான் அடங்க அவர் எனக்கு என்ன சோறா போடுகிறார்? என்றும் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி என என்னை யாரும் இயக்கவில்லை என்று கூறியுள்ளார் .விமர்சனம் வைக்கத்தான் செய்வேன்; அதை தாங்கிக் கொண்டு தலைமை அழைத்து பேசியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 26] எபிசோடில் புது வீட்டிற்கு குடி வரும் ரோகிணியின் அம்மா, ரோகிணி போட்ட…
சென்னை : வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலையாக உருவெடுக்கும் என முன்னதாக தெரிவித்திருந்தனர். மேலும்,…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்…
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய…
டெல்லி : 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது.…