சென்னை : நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததோடு, 2026 தான் எங்கள் இலக்கு. தேர்தல் ஆணையத்திடம் இருந்து 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, சின்னம், கொடி, சித்தாந்தங்கள், கொள்கைகள் ஆகியவற்றை முடிவு செய்து, மக்களைச் சந்திக்க உள்ளோம் என அறிவித்தனர்.
அதன்படி, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை, போட்டியிடும் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால், மக்களவை தேர்தலும் வெற்றி பெற்ற சில முக்கிய தலைவர்களுக்கு தவெக தலைவர் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத நடிகர் விஜய்யின் தவெக கட்சி, ஜூலை 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் தவெக போட்டியிடப் போவதில்லை என அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “2026 வரை மக்கள் பணி மட்டுமே செய்வோம் என்றும், மக்களும், கட்சி நிர்வாகிகளும் குழப்பிக் கொள்ள வேண்டாம்” எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…