இடைத் தேர்தலில் தவெக போட்டியா – புஸ்ஸி ஆனந்த் சொல்வதென்ன?

Vikravandi tvk party (1)

சென்னை : நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்‌’ கட்சி தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததோடு, 2026 தான் எங்கள் இலக்கு. தேர்தல் ஆணையத்திடம் இருந்து 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, சின்னம், கொடி, சித்தாந்தங்கள், கொள்கைகள் ஆகியவற்றை முடிவு செய்து, மக்களைச் சந்திக்க உள்ளோம் என அறிவித்தனர்.

அதன்படி, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை, போட்டியிடும் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால், மக்களவை தேர்தலும் வெற்றி பெற்ற சில முக்கிய தலைவர்களுக்கு தவெக தலைவர் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத நடிகர் விஜய்யின் தவெக கட்சி, ஜூலை 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் தவெக போட்டியிடப் போவதில்லை என அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “2026 வரை மக்கள் பணி மட்டுமே செய்வோம் என்றும், மக்களும், கட்சி நிர்வாகிகளும் குழப்பிக் கொள்ள வேண்டாம்” எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்