40 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தனர்? – ஜே.பி.நட்டா
40 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தனர்? என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கேள்வி.
கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி கூட்டுரோட்டில் பாஜக தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, 5 அடி உயரக் கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றி வைத்தார். பின், தருமபுரி, நாமக்கல், திருச்சி, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்ட பாஜக அலுவலகங்களை காணொளி மூலமாக திறந்து வைத்தார்.
ஜே.பி.நட்டா உரை
அதன்பின் உரையாற்றிய ஜே.பி.நட்டா, தமிழகத்தில் ஒரே நாளில் 10 பாஜக அலுவலகங்கள் திறக்கப்பட்டது இதுவே முதல்முறை. அனைத்து மாவட்ட தலைமையகத்தில், நவீன முறையில் பாஜக அலுவலகம் திறக்க அமித்ஷா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என தெரிவித்துள்ளார்.
வாரிசு அரசியலுக்கு பெயர் போனது திமுக
தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு பெயர் போனது திமுக; பல்வேறு மாநிலத்தில் குடும்ப அரசியல் நடக்கிறது; தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். பாஜக 9 ரயில்வே திட்டங்களை கொடுத்துள்ளது. தமிழகத்தைப் போன்று மற்ற மாநிலங்களிலும் திருக்குறளுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், 40 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தனர்? 40 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. பாஜக ஆட்சிக்கு முன் 98% செல்போன் இறக்குமதி செய்யப்பட்டது; ஆனால் தற்போது 97% செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.