பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு? த.வெ.க பொருளாளர் சொல்வேதென்ன?
த.வெ.க தலைவர் விஜய் வருகை குறித்து தற்போது எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று த.வெ.க மாநில பொருளாளர் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியது. பரந்தூரில் விமான நிலையம் அமையக் கூடாது என்று போராடி வரும் மக்களை சந்திக்க அவர் செல்ல திட்டமிட்டிருந்தார்.
பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு அங்கிருக்கும் கிராமத்தினர் தொடர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த போராட்டக்குழுவை சந்தித்து பேசவும், பாதுகாப்பு வழங்க கோரியும், விஜய் தரப்பில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்த நிலையில், அனுமதி கிடைத்துள்ளது.
அதன்படி, ஜன.20ம் தேதி தவெக தலைவர் விஜய் அவர்களை சந்திக்கவுள்ள நிலையில், அதிக கூட்டத்தைக் கூட்டாமல், அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும்தான் வரவேண்டும் எனவும் கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் நிபந்தனை அளித்துள்ளது.
விஜய் மக்களை சந்திக்க 2 இடங்களை ஒதுக்கியுள்ள காவல்துறை, அதில் எங்கு மக்களை சந்திக்க உள்ளார் என்பதை இன்று மாலைக்குள் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாக ஒரு தகவல் பரவியது. இந்த நிலையில், ‘பரந்தூர் விமானநிலைய போராட்டக் குழுவினரை சந்திக்க த.வெ.கவுக்கு நிபந்தனை விதிக்கப்படவில்லை, த.வெ.க தலைவர் விஜய் வருகை குறித்து தற்போது எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை’ என்று த.வெ.க மாநில பொருளாளர் வெங்க ட்ராமன் தகவல் தெரிவித்துள்ளார்.