100 நாட்களில் மோடி தலைமையிலான அரசு செய்தது என்ன? நிர்மலா சீதாராமன் விளக்கம்

Default Image

6.37 கோடி விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரதமர்  மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 100 நாட்களில் செய்தது என்ன ? என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் விளக்கம் அளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில்,இந்திய பொருளாதாரம் 5 லட்சம் கோடி ரூபாயாக உயர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. உள்கட்டமைப்பு துறையில் 100 லட்சம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரே வரியான ஜிஎஸ்டி மூலம் சரக்கு போக்குவரத்து செலவு குறைந்துள்ளது.1.95 கோடி வீடுகள் கட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது .2022-க்குள் அனைவருக்கும் குடிநீர், மின்சார வசதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்க ஆயுஷ்மான் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.குழாய் மூலம் குடிநீர் வழங்க சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளோம்.6.37 கோடி விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 10 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். உலகளவில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதில் இந்தியா முன்னேற்றம்.மின்சார கார் விற்பனையை ஊக்குவிக்க வரியை குறைத்துள்ளோம். ஊழலுக்கு வழிவகுக்கும் தேவையில்லாத சட்டங்களை நீக்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்