பொன்விழா எழுச்சி மாநாட்டில் எடப்பாடி பேசியது என்ன? நீட் முதல் கொரோனா வரை!

Published by
செந்தில்குமார்

மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்தார்.

அவருக்கு ஹெலிகாப்டரில் இருந்து ஒரு டன் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில் கலை நிகழ்ச்சிகளுக்காக 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் விழா மேடைக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வந்தார்.

எடப்பாடி பழனிசாமி பேச்சு:

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அவர்கள் உரையாற்றினார். மாநாட்டில் பேசிய அவர், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஒரு மாபெரும் இயக்கம். தமிழகத்திலேயே மிகப்பெரிய கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் 1972 அக்டோபர் 17ம் தேதி கழகத்தை தோற்றுவித்தார். இன்றைக்கு கழகத்திற்கு பொன்விழா கொண்டாடி 51ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.”

இந்த 51 ஆண்டு காலத்தில் 31 ஆண்டு காலம் தமிழ் மண்ணிலே ஆட்சி செய்த பெரிய கட்சி அதிமுக கட்சி. இந்த 31 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் தான் இந்த தமிழகம் ஏற்றம் பெற்றது. கடைக்கோட்டில் இருக்கிற சாமானியன் கூட நன்மை கிடைக்கப்பெற்றது. அனைத்து துறைகளிலும் முதன்மை துறையாக செயல்படுத்தி காட்டிய அரசு அண்ணா திமுக அரசாங்கம்.

அதிமுகவை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது:

அதிமுகவை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது, எந்த கட்சியாலும்  அசைக்க கூட முடியாது.  ஏனெனில் அதிமுக தொண்டன் உழைப்பால் உயர்ந்தவன் எந்த பிரதிபலமும் பார்க்காமல் தலைமை அறிவித்தவுடன் சொந்த வேலைகள் எல்லாம் விட்டுவிட்டு கழகம் தான் பெரிது கழகத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம் என்று சபதம் ஏற்று வந்திருக்கிறீர்கள். இதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.

அதிமுக தொண்டன் என்று சொன்னாலே பெருமை. அந்த பெருமைக்குரியவர்கள் என் முன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறீர்கள். தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. ஆனால் நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்ற இயக்கம் என்று சொன்னாள் அதிமுக தான் முதலில் நிற்கிறது. திடீரென்று புரட்சித் தலைவர் அவர்கள் மறைந்தார். இயக்கம் அழிந்து போய்விடும் என்று திரு.கருணாநிதி கனவு கண்டார்.

ஆனால் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நான் இருக்கின்றேன் என்று பிரிந்த இயக்கத்தை ஒன்றாக இணைத்து மீண்டும் எம்ஜிஆர் உடைய ஆட்சியை தமிழகத்திலே ஏற்படுத்தினார். 1989இல் முதல் முதலாக கழகம் இரண்டாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிட்டோம். நான் அப்பொழுது அம்மா அணியிலே இருந்தேன். அப்பொழுது எனக்கு கொடுக்கப்பட்ட சேவல் சின்னத்தில் முதல் முதலாக 1989 இல் வெற்றி பெற்றேன்.

என்னை கேலி செய்தார்கள்:

அதற்குப் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றேன். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றோம். உங்களுடைய ஆதரவால் தமிழகத்தினுடைய முதலமைச்சராக நான் வந்தேன். அப்பொழுது இன்றைய முதலமைச்சர் அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு விமர்சனத்தை ஊடகத்தின் வாயிலாக பத்திரிக்கையின் வாயிலாக வெளிப்படுத்தினார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கழக ஆட்சி அமைந்திருக்கின்றது. இந்த ஆட்சி 10 நாட்கள் தாக்கு பிடிக்குமா? ஒரு மாதம் தாக்கு பிடிக்குமா? மூன்று மாதம் தாக்குமடிக்குமா? என்று ஏளன கேலி செய்தார். உங்களுடைய ஆதரவின் பேரிலேயே தமிழக மக்களுடைய பேர் ஆதரவு நாலு வருடம் இரண்டு மாத காலம் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம்.

குடிதண்ணீர் பிரச்சனையை தீர்த்தோம்:

நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது கடுமையான வறட்சி. பல பகுதிகளில் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை. சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரைக் கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கி குடிதண்ணீர் பிரச்சனையை தீர்த்தோம். அதற்குப் பிறகு கஜா புயல் டெல்டா மாவட்டம் முழுவதும் அழிந்துவிட்டது.

கழக ஆட்சியில் உயர் அதிகாரிகள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களோடு கலந்து பேசி, புயல் எந்த அளவுக்கு வீசியதோ புயல் வேகத்தை காட்டிலும் வேகமாக செயல்பட்டு, புயலுனுடைய அடிச்சுவடி இல்லாமல் திறமையாக நிவாரண பணியை மேற்கொண்டு செயல்படுத்திய அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம். அந்த புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பாசன விவசாயிகளுக்கு நிவாரண தொகை அள்ளி அள்ளி கொடுத்தோம்.

கொரோனாவை அரவாக அகற்றினோம்:

பொது மக்களுக்கு நிவாரணத்தை அளித்தோம். விவசாயிகளுக்கு நிவாரணத்தை அளித்தோம். மக்களே காத்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் என்று மக்கள் பாராட்டினார்கள். அதற்கு பிறகு கொரோனா, சாதாரண கொரோனா அல்ல நீங்க முகத்தை மறைத்து தான் உங்களை பார்க்க வேண்டிய சூழ்நிலை. அந்த கொரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாது உலகமே அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட கொரோனாவை அதிமுக அரசு மிகச் சிறப்பாக கையாண்டு கொரோனா வைரஸ் தொற்று அரவாக தமிழகத்திலே அகற்றியது.

அந்த கொரோனா வைரஸ் வந்த போது மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் வந்தவர்களுக்கு எத்தகைய அறிகுறி இருக்கும் என்று தெரியவில்லை. அந்த காலகட்டத்தில் கூட அதிமுக அரசு நம்முடைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக அறிவித்த டாக்டர் விஜயபாஸ்கர் அவர்கள் என்னோடு இருந்து, அண்ணா கவலைப்படாதீர்கள், எப்பாடுபட்டாவது மருத்துவர்களையும் செவிலியங்களையும் அழைத்து பேசி கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றுவோம் என்று சொன்னார். அதிகாரிகளும் ஒத்துழைத்தார்கள். மருத்துவர்கள் ஒத்துழைத்தார்கள். தமிழகத்தில் விலை மதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றிய அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம்.

விலையில்லா அரிசி மற்றும் சர்க்கரை:

அந்த காலகட்டத்தில் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடையாது. மக்கள் கஷ்டப்படுவது என்னுடைய கவனத்திற்கு வந்தவுடன் நியாய விலை கடையில் 15 மாத காலமாக, விலையில்லா அரிசி, விலையில்லா சர்க்கரை, விலையில்லா மண்ணெண்ணெய் கொடுத்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் அதோடு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் அந்த காலத்திலே கொடுத்தோம். இந்த மதுரை மாநகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருந்த காரணத்தினால், மாநகர பகுதியில் இருக்கின்றவர்களுக்கு குடுத்து அட்டைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம்.

2,247 கோடி நிவாரண தொகை:

இப்படி நான்கு வருட இரண்டு மாத காலத்தில் வறட்சியை சந்தித்தோம். வறட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2,247 கோடி நிவாரண தொகை வழங்கினோம். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக நாங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தந்தோம்.

அதேபோல ஏழை எளியவர்கள் உணவல்லாமல் தவிர்க்க கூடாது என்பதற்காக, நாள்தோறும் 7 லட்சம் பேருக்கு அம்மா உணவகத்தின் சமூகக்கூடங்களில் உணவு தயாரித்து ஏழைகளுக்கு வயிறார உணவு கொடுத்தோம் கர்ப்பிணி பெண்களுக்கு முதியோர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிற்கு சென்று கூட உணவு கொடுத்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம்.

தமிழ்நாடு முழுவதும் 32 மாவட்டங்களிலே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை உங்களோடு துணையோடும் மேடையிலே இருக்கின்ற தலைமைக் கழக நிர்வாகிகள் துணையோடு, எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திக் காட்டினோம். அந்த மாநாட்டிலே சுமார் 5,062 அறிவிப்புகளை வெளியிட்டோம். கிட்டத்தட்ட 3215 திட்டங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதற்காக 5,750 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்தோம்.

தலைவர்களுக்கு நினைவு சின்னங்கள்:

அதேபோல தமிழகத்தை இந்த நிலைக்கு அதிமுகவின் ஒப்பற்ற தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்க்கு புகழ் சேர்க்கின்ற விதமாக மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையிலே பிரம்மாண்டமாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை குறிக்கின்ற வகையில் அற்புதமான ஆர்ச்சை உருவாக்கினோம். அதேபோல, சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு மத்திய அரசாங்கத்தில் இடத்திலே மத்திய அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யப்பட்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவருடைய பெயரைச் சூட்டினோம்.

அதேபோல, நமது இயக்கத்தை கண்ணிமையை காப்பது போல காத்து நம்மை போல் இருக்கின்ற சாதாரண தொண்டன் கூட உச்ச நிலைக்கு உருவாவதற்கு அடித்தளமாக இயங்கிய அம்மாவுக்கு புகழ் சேர்க்கின்ற விதமாக அவருக்கு மெரினா கடற்கரையில் பீனிக்ஸ் பறவை மாடலில் அற்புதமான நினைவு மன்றத்தை உங்களுடைய ஆதரவோடு துவக்கப்பட்டது .புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டது. அதேபோல புரட்சித்தலைவி அம்மாவிற்கு முழு உருவ வெண்கல சிலை வைக்கப்பட்டது. புரட்சித்தலைவி அம்மாவுக்கு அரசின் சார்பாக பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

விலையில்லா மடிக்கணினி திட்டம்:

2011 சட்டமன்ற பொது தேர்தலின் போது அம்மா அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள் ஏழை மக்களுக்கு பயன்படுகின்ற விதமாக விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றிய ஒரே கட்சி அதிமுக. மழை நீர் சேகரிப்பு, விலையில்லா அரிசி நியாய விலை கடைகளில் கொடுத்தோம்.

தமிழகத்திலே ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ மாணவி அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள். அப்படி அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ செல்வங்கள் விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும். அறிவுபூர்வமான கல்வி கிடைக்க வேண்டும். என்பதற்காக அம்மா அவர்கள் சிந்தனையில் உதிக்கப்பட்ட மடிக்கணினி திட்டம். சுமார் 52 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி கொடுத்து அவர்களை அறிவுபூர்வமாக மாணவர்களாக உருவாக்கினோம். இதற்காக பல்லாயிரக்கணக்கான கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

விடியா திமுக:

இன்றைக்கு வேளாண்மையிலே சாதனை படைத்தோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய 10 ஆண்டு ஆட்சியிலே 50 ஆண்டு முன்னேற்றத்தை நாம் பார்த்தோம். விடியா திமுகவின் இரண்டு ஆண்டு ஆட்சியிலே இருபது வருடம் பின்னேற்றத்தை பார்க்கின்றோம். அதிமுக ஆட்சியில் காவிரி நதிநீர் பிரச்சனை 50 ஆண்டுகால தீர்க்க முடியாத பிரச்சனை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டப் போராட்டம் நடத்தினார்.

அந்த காலகட்டத்தில் துரதிஷ்டவசமாக அம்மா அந்த மண்ணிலே மறைந்தார்கள். அம்மாவுடைய அரசு தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி 50 ஆண்டு காலத்திற்கு விவசாயிகள் போராடி வந்த அந்த காவிரி நதிநீர் பிரச்சனையை உச்சநீதிமன்றத்தில் மூலமாக தீர்ப்பை பெற்றோம். அதேபோல எல்லா பாசன விவசாயிகள் தங்களுடைய பொன்விளைகின்ற பூமி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் இருந்தார்கள்.

டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை:

என்னிடத்தில் டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை அளித்தார்கள். எங்களுடைய நிலத்தை மீத்தேனுக்கு எடுக்கப் போகிறார்கள் என்று செய்தி வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, எங்களுடைய நிலத்தை பாதுகாத்துக் கொடுங்கள் என்று சொன்னார்கள். நானும் ஒரு விவசாயி. ஒவ்வொரு விவசாயியும் ரத்தத்தை வியர்வையாக மண்ணிலே சிந்தி உழைத்து தான் அவன் ஏற்றம் பெற முடியும். இரவு என்றும் பகல் என்றும் பாராமல் உழைக்கின்ற ஜாதி விவசாய ஜாதி.

உடனடியாக மத்திய அரசிடம் தொடர்பு கொண்டு எங்கள் பாசன விவசாயிகள் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றார்கள். அதை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தவுடன், மத்திய அரசும் நம்முடைய கோரிக்கையை ஏற்று நம்முடைய விவசாயிகள் டெல்டா மாவட்டத்தில் இருக்கின்ற விவசாயிகள் வயிற்றிலே பால் வார்க்கின்ற விதமாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்டது.

ஏரிகளை தூர்வாரினோம்:

அதேபோல பல ஆண்டு காலமாக ஏரி, குளம், குட்டை தூர்வாராமல் இருந்தது. இன்றைக்கு நம்முடைய மாநிலம் நீர் பற்றாக்குறை மாநிலம். அண்டை மாநிலத்தை நம்பி தான் நாம் வேளாண்மை செய்ய வேண்டிய சூழ்நிலை. இப்படிப்பட்ட சூழ்நிலையிலே பருவ காலங்களில் பெய்யக்கூடிய மழை நீரை ஒரு சொட்டுக் கூட வீணாகாமல் அதை முழுமையாக பாதுகாக்க வேண்டும் என்பதற்காக திட்டத்தை கொண்டு வந்தோம்.

தமிழகத்தில் சுமார் 14000 ஏரிகள் பொதுப்பணி துறையின் கீழ் வருகின்றது. உள்ளாட்சித் துறையின் கீழ் 26 ஆயிரம் ஏரிகள் வருகின்றது. ஆனால், தமிழகத்தில் 40 ஆயிரம் ஏரிகள் இருக்கின்றன. அதிமுக திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாயிகளே பயன்படுத்தி அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து பெரும்பாலான ஏரிகள் தூர்வாரப்பட்டு பருவ காலங்களில் பெய்கின்ற மழை நீர் முழுவதும் சேமித்து வைத்தோம்.

இந்த டெல்டா மாவட்டத்தில் பாலைவனமாக ஆக்குவதற்கு அன்றைய ஆட்சியாளர்கள் திமுக ஆட்சி, அந்த காலகட்டத்தில் திரு.ஸ்டாலின் முன்னிலையில் மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. விவசாயிகளை காத்தது அண்ணா திமுக அரசாங்கம். அதேபோல, தென் மாவட்ட மக்கள் பயன்படுகின்ற விதமாக, ஐந்து மாவட்ட மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தி 136 அடி 142 அடியாக ஆணையினுடைய நீர்மட்டத்தை உயர்த்தினார்.

இன்றைக்கு தென் மாவட்டத்தில் இருக்கிற ஐந்து மாவட்ட மக்களுக்கு விவசாயத்திற்கும் குடிநீருக்கு ஆளாக இருப்பது முல்லைப் பெரியாறு அணை. அதையும் காத்தது அண்ணா திமுக அரசாங்கம். அதற்கு மேலாக இந்த முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்தி இன்றைக்கு 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்துவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்தோம். ஆனால், விடியா திமுக அரசு பொறுப்பேற்று அதை கிடப்பிலே போட்டுவிட்டார்கள்.

திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது:

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் அவர்கள்தேர்தல் பிரச்சாரத்தின் போது, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றுதான் சொன்னீங்களா?  இல்லையா? பிறகு ஏன் ரத்து செய்யவில்லை? உதயநிதி ஸ்டாலின் அவர்களே மாணவர்களே ஏமாற்றாதீங்க ஸ்டாலின் அவர்களே மாணவர்களை ஏமாற்றாதீங்க  நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக அதை தடுத்து நிறுத்தியதற்கு போராடியது அதிமுக.

ஏதேதோ சொல்லி இன்று உண்ணாவிரதம் இருந்து நாடகம் ஆடுகிறார்கள் இவர்களே கொண்டு வந்து இவர்களை ரத்து செய்வதற்கு நாடகமும் ஆடுகின்ற ஒரே கட்சி திமுக கட்சி தான். திமுக ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” மேலும், டாஸ்மாக்கில் திமுக அரசு நாளொன்றுக்கு ரூ.10 கோடி ஊழல் செய்து வருகிறது. ஒரு பாட்டிலுக்கு ரூ.100 வரை திமுக அரசு ஊழல் செய்கிறது. டாஸ்மாக் ஊழலில் சிக்கிய ஒரு அமைச்சர் சிறையில் இருக்கிறார். முறைகேடாக நடக்கும் பார்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான கோடி பணம் திமுக மேலிடத்துக்கு செல்கிறது.

மதுரை மண் ராசியான மண்:

இந்த மதுரை மண் ராசியான மண். இந்த மண்ணிலே எதை தொடங்கினாலும் தொட்டது துலங்கும். அப்படி ராசியான மாவட்டத்திலே இந்த மதுரை மண்ணிலே முதல் முதலாக நான் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை இந்த மண்ணிலே தொடங்கி இருக்கிறோம். நம்மை ஆளாக்கிய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு புகழ் சேர்க்கின்ற விதமாக 30.6.2017 புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது, இந்த மதுரை மண்ணிலே தான். இந்த மதுரை மண்ணில் துவங்கப்பட்ட அனைத்தும் வெற்றிதான். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி தனது உரையை முடித்தார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…

40 minutes ago

“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…

45 minutes ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

55 minutes ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

2 hours ago

கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா  சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…

2 hours ago

மன்னராட்சி மன நிலைக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் – அண்ணாமலை காட்டம்!

சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…

3 hours ago