“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!
மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் பேசி வைத்துக்கொண்டு விளையாடுவதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்தும், தவெகவின் அடுத்தகட்ட வேலைகள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசினார். மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தும் பேசியுள்ளார்.
மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து பேசிய விஜய், “புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே கல்வித்துறைக்கான நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தமிழ்நாடு அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எல்லா மொழிகளையும் நாம் மதிப்போம், அதில் மாற்றுக்கருத்தே இல்லை, இங்கே தனிப்பட்ட முறையில் எந்த மொழியை வேண்டுமேனாலும் யார் வேண்டுமானாலும் தேவைப்பட்டால் கற்றுக்கொள்ளலாம். வேறொரு மொழியை அரசியல் ரீதியாக திணிப்பதை அனுமதிக்க முடியாது. 3வது மொழியை திணிக்கும் மும்மொழி கொள்கையை உறுதியாக எதிர்க்கிறோம்.
ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சிக்கு உரிமைக்கு எதிராக, ஒரு மாநில அரசின் மொழிக்கொள்கையை கல்விக்கொள்கையை கேள்விக்குறியாக்கி, வேறொரு மொழியை வலுக்கட்டாயமாக அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால்… எப்படி? தவெக சார்பில் அதை நாமும் அதை எதிர்ப்போம்” என்றார்.
What Bro? IT’s Very Wrong Bro…
கல்வி நிதி விவகாரத்தில் எல்கேஜி, யூகேஜி பிள்ளைகள் போல் சண்டையிடுகிறார்கள். “இங்கே எவ்வளவு சீரியஸாக ஒரு பிரச்னை நடந்துகொண்டிருக்கிறது.? இவங்க ரெண்டு பேரும், அதாங்க ஃபாசிஸமும் பாயாசமும் – நம்ம கொள்கை எதிரியும் அரசியல் எதிரியும் பேசி செட்டிங் செய்துகொண்டு சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் அடித்துக் கொள்வதுபோல அடித்துக் கொள்வார்களாம்… மக்கள் அதை நம்பணுமாம். “What Bro? Its Very Wrong Bro”.. என்று திமுக, பாஜகவை விமர்சித்தார். இதுக்கு இடையில நம்ம பசங்க. உள்ளபோய் #TVKforTN என சம்பவம் செய்துவிட்டு வந்துவிட்டார்கள். ‘யார் சார் நீங்கள்லாம்? எங்க சார் இருக்கீங்க?’ ஸ்லீப்பர்செல்ஸ் மாதிரி” என்று நகைச்சுவையாக பேசியிருக்கிறார் தவெக தலைவர் விஜய்.
லேட்டஸ்ட் செய்திகள்
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025
எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !
February 26, 2025
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025