‘எல்லை பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்?’ -கமல்ஹாசன்
எல்லை பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக போர்பதற்றம் நிலவி வருகிறது. கடந்த திங்கள்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,எல்லை பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் .லடாக் விவகாரத்தில் தேசத்தின் பாதுகாப்பை பாதிக்காத வகையில் உண்மை நிகழ்வுகளை மக்களிடம் பகிருங்கள் .கேள்வி கேட்பவர்களை தேசத்திற்கே விரோதியைப் போல ஒரு பிம்பத்தை கட்டமைத்திருக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
‘
Makkal Needhi Maiam Party President Mr. @ikamalhaasan‘s press release on India – China Border Tensions (Thamizh) .#PressRelease #MakkalNeedhiMaiam pic.twitter.com/dOJnVpjrpc
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) June 21, 2020