பாம்பன் புதிய ரயில்வே பாலம் இன்று திறப்பு: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி, இன்னும் சற்று நேரத்தில் நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்து வைக்கிறார்.

pm modi - pambanBridge

ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், நண்பகல் 12 மணியளவில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.

இந்த பாலம், நூற்றாண்டு கால பழமையான பாம்பன் ரயில்வே பாலத்திற்கு மாற்றாகவும், நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடனும் கட்டப்பட்டுள்ளது. மேலும், ரயில், கப்பல் போக்குவரத்தையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர், மதியம் ராமநாதசுவாமியை தரிசிக்கும் பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் 8,300 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

இதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை திறக்க சாலைப் பாலத்தில் இதற்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது. பாம்பன் புதிய பாலம் திறக்கப்பட்ட பிறகு, தொடங்கப்பட உள்ள ரயில் சேவைக்காக தயார் நிலையில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

பாம்பன் பாலத்தின் சிறப்புகள்

  • ராமேஸ்வரத்தை மண்டபத்துடன் இணைக்கும் வகையில் 1914ஆம் ஆண்டில் ரயில் பாலம் கட்டப்பட்டது.
  • இது இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமாகும்.
  • ஆங்கிலேயர் ஆட்சியில் பாம்பன் பகுதியில் 2,050 மீட்டர் நீளத்தில் கடலுக்கு மத்தியில் பாலம்.
  • நூற்றாண்டுகளை கடந்த பாம்பன் பாலம் அதன் உறுதித்தன்மையை இழந்ததால் புதிய பாலம்.
  • புதிய பாம்பன் ரயில்வே பாலம் 2.08 கிலோமீட்டர் (2078 மீட்டர்) நீளமும், கடல் மட்டத்திலிருந்து 15.5 மீட்டர் உயரமும் கொண்டது.
  • பாலத்தில் 333 கான்கிரீட் அடித்தளம், 101 தூண்கள், 99 இடைவெளி இணைப்புகள், 72.5மீ. லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.
  • பாம்பன் பாலத்தின் நடுப்பகுதி 17 மீட்டர் உயரம் வரை உயரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • நீடித்த ஆயுள், குறைந்த பராமரிப்புத் தேவைகளை கொண்ட வகையில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப இரட்டை ரயில் தடங்களை அமைக்கும் வகையில் வடிவமைப்பு.
  • பாலத்தின் நடுப்பகுதியில் 72.5 மீட்டர் நீளமுள்ள தூக்கு பகுதி உள்ளது, இது மின்-இயந்திரவியல் தொழில்நுட்பத்தால் 17 மீட்டர் உயரத்திற்கு தூக்கப்படுகிறது. இதனால் பெரிய கப்பல்கள் எளிதாக கடந்து செல்ல முடியும்.
  • 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், மற்றும் 99 எஃகு இணைப்பு கர்டர்களைக் கொண்டு இது கட்டப்பட்டுள்ளது. தூக்கு பகுதியின் எடை சுமார் 700 டன்கள்.
  • பழைய பாலத்தில் இல்லாத மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை இதில் அமைக்கப்பட்டுள்ளது, இது ரயில்களை அதிக வேகத்தில் இயக்க உதவும்.
  • வின்ச் மெஷின் தொழில்நுட்பம் மற்றும் லிப்ட் முறை மூலம் தூக்கு பகுதி வேகமாக உயர்த்தப்பட்டு இறக்கப்படுகிறது, இது பழைய பாலத்தில் மனித ஆற்றலால் செய்யப்பட்டதற்கு மாறாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்