பஸ் பயணம் தொடர்பாக பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி!
பஸ் பயணம் தொடர்பாக பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பராவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் சுவாமி, ஊரடங்கு முடிந்த பின்னர், அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்தும், ஓட்டுனர், நடத்துனர், பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் காணொலி காட்சி மூலம் நேற்று விசாரித்தனர். இந்த விசாரணையில், தமிழக அரசு ஏற்கனவே பொது போக்குவரத்து குறித்து அறிவிப்புகளை வெளியிட்டிருந்த போதிலும், ஊரடங்கு முடிவுக்கு வந்தபிறகு, பஸ் பயணம் தொடர்பாக என்னென்ன பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துள்ளது? என்பது குறித்து போக்குவரத்து துறை செயலாளர் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு, ஜூன் -1ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.