ஆழ்துளை கிணறு மரணங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கிய சம்பவங்களில் ஓன்று திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் உயிரிழந்த சம்பவம் ஆகும்.இந்த சம்பவத்தை தொடர்ந்து வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அவரது வழக்கில்,கடந்த 2010 -ஆம்ஆண்டு உச்சநீதிமன்றம் குழந்தைகளை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கியது .ஆனாலும் இதன் பின்னர் ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பாக மூடும் நடவடிக்கைகளை அதிகாரிகள் சரியாக மேற்கொள்ளவில்லை என்றும் இதன் விளைவாக ஆண்டுதோறும் ஆழ்துளை கிணறு விபத்துகளில் உயிரிழந்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,ஆழ்துளை கிணறு மரணங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? என்று கேள்வி எழுப்பியது.மேலும் ஆழ்துளை கிணறுகளில் விபத்துகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிக்கை தாக்க செய்ய உத்தரவு பிறப்பித்தது.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…