சென்னை மழை: மீட்பு நடவடிக்கைகள் என்னென்ன.? லிஸ்ட் போட்ட மாநகராட்சி.!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கை வெளியகியுள்ளது.

சென்னை : காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வலுவாக இருப்பதால், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு, அதி கனமழைக்கான, ‘ரெட் ன அலர்ட்’ வாபஸ் பெறப் படவில்லை என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
அதன்படி, இந்தாண்டு வட கிழக்கு பருவமழை துவங்கி, சென்னையில் மழை பெய்து வருகிறது. வரும், டிசம்பர் வரை மழை பொழிவு இருப்பதால், மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில், நேற்று முன் தினம் பெய்த கனமழை காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
- வடகிழக்குப் பருவமழை சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 6.44 மி.மீ மழை பெய்துள்ளது.
- மழையின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாய்ந்த மரங்கள் எண்ணிக்கை 77. இதுவரை 77 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
- சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் ஒவ்வொரு மையத்திலும் 200 நபர்கள் வரை தங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
- இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 1720 நபர்கள் அழைத்து வரப்பட்டு 33 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன.
- பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 98மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன.
- (16.10.2024) நேற்று இரவு வரை மொத்தம் 14,60,935 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 388 அம்மா உணவகங்களிலும் இன்றும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
- மேலும், சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது.
- நீர்தேங்கியுள்ள 542 இடங்களில் 531 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
- கடந்த 24 மணிநேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 7470 அழைப்புகள் வந்துள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- மீட்புப்பணியில் ஈடுபட சென்னையில் 103 படகுகள் தயார் நிலையில் உள்ளது.
- மழைக்காலத்தினை முன்னிட்டு, பொதுசுகாதாரத்துறையின் சார்பில் சென்னையில் மட்டும் இன்று 213 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை குடிநீர் வாரியம்
- கழிவுநீர் அகற்றும் பணிக்காக சென்னை குடிநீர் வாரியத்தின் 73 சூப்பர் சக்கர் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- மற்ற மாநகராட்சி, நகராட்சி, மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சூப்பர் சக்கர் இயந்திரங்கள் எண்ணிக்கை 89.
- பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை சீர் செய்வதற்கு 524 ஜெட்ராடிங் மற்றும் டீசில்டிங் இயந்திரங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.
- சீரான குடிநீர் வழங்குவதற்கு நாள்தோறும் இயக்கப்படும் 453 லாரிகளுடன், கூடுதலாக 36 லாரிகள் இயக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது காலை 8 மணி வரை 705 நடைகள் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
- பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 300 நிவரான மையங்கள் மற்றும் 98 சமையல் கூடங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மழை காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள மீட்பு நடவடிக்கைகள் என்னென்ன..????????????????????????? pic.twitter.com/LpGFaaexXx
— ????❤️????????????????????????❤️ (@abaraj2O) October 17, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!
February 24, 2025
இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது! நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள்!
February 24, 2025
தமிழகத்தில் எங்கெல்லாம் எப்போது மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்…
February 24, 2025
NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!
February 24, 2025
ஈஷா யோகாவின் சிவராத்திரி விழாவுக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!
February 24, 2025