LIVE : தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல்… சிறப்பம்சங்கள் என்னனென்ன.! நேரலை இதோ…

சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அது குறித்த தகவல் நேரலையாக கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.

tn budget 2025 live

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாசிக்கத் தொடங்கினார். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய துவங்கியதும், அதிமுக கடும் அமளியில் ஈடுபட்டு பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளது.

  • தமிழ்நாட்டில் 2025-26 ஆம் ஆண்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி கூடம் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும்.
  • சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும். இதற்காக 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • ரூ.40 கோடி மதிப்பீட்டில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் சிலைகளுக்கு மரபுசார் காட்சி அரங்கம் அமைக்கப்படும்.
  • உலக தமிழ் ஒலிம்பியாட் போட்டி இனி ஆண்டு தோறும் நடத்தப்படும்.
  • வங்கிக் கடன் உதவியாக 10 இலட்சம் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.5 இலட்சம் கோடி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கலைஞர் கைவினை திட்டத்தின் மூலம், 19,000 கைவினைஞர்களுக்கு மானிய நிதியாக ரூ.74 கோடி ஒதுக்கீடு.
  • ரூ.1 கோடியில் வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
  • ரூ.70 கோடியில் 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்கப்படும்.
  • 6 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற முயற்சி செய்யப்படும்.
  • கடல்சார் வள அறக்கட்டளைக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.50 கோடியில் வியன் திறன்மிகு மையம் அமைக்கப்படும்.
  • அனைத்து மாநகராட்சிகளிலும் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும். 30 இடங்களில் ஒரு மையத்துக்குத் தலா ரூ.5 கோடி ஒதிக்கீடு.
  • இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
  • ரூ.366 கோடியில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இதன் மூலமாக 17,500 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
  • 250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா அமைக்கப்படும். இதன் மூலமாக 5,000 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
  • ரூ.250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா அமைக்கப்படும். இதன் மூலமாக 20,000 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
  • முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு உதவிபெறும் பள்ளிகள் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மேலும் 3.14 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
  • இதுவரை பலன் பெறாதோருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ரூ13,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.120 கோடியில் காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.
  • ரூ.100 கோடியில் சென்னை, கோயம்புத்தூரில் அடிப்படை அறிவியல் & கணித ஆராய்ச்சிப் படிப்புகள் மையம் அமைக்கப்படும்.
  • 2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும்.
  • ரூ.152 கோடியில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் 1,308 மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
  • ரூ.100 கோடியில் சென்னை அறிவியல் மையம் அமைக்கப்படும்.
  • தமிழர்கள் வசிக்கும் பிற மொழி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்படும்.
  • தலை சிறந்த 500 தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • 45 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும்.
  • நகர்ப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதிக்கீடு.
  • ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்த்தப்படும்.
  • ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
  • ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
  • ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.
  • சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.
  • மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் ஒன்றிய அரசு ரூ.2150 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கவில்லை.
  • மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் தொடங்கப்படும். இதன் மூலம், 29.74 இலட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.
  • ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம் தொடங்கப்படும்.
  • ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேம்படுத்தப்
  • ரூ.675 கோடியில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைக்கப்படும்.
  • ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) அமைக்கப்படும்.
  • சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் கட்டுவதற்கு ரூ.600 கோ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 25,000 வீடுகள் கட்டப்படும்.
  • 6100 கி.மீ. நீளம் முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம் தொடங்கப்படும். ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம், ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 இலட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
  • ரூ.40 கோடியில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் அமைக்கப்படும்.
  • இராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகத்திற்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  •  ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகத்திற்கு ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
  • 100 வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம்.
  • அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்.
  • அகர மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும்.
  • ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
  • ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும்.
  • பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும்.
  • தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும்.
  • இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு. எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாது, நம் உரிமைகளைக் காக்கும் முதலமைச்சரை நாடே பாராட்டிக்கொண்டு இருக்கிறது என்று தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
  • தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதை ஒட்டி, பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தினார்.
  • இன்னும் சற்று நேர்த்தில் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சட்டப்பேரவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட மூத்த அமைச்சர்கள் வருகை தந்துள்ளார்.
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற பின் திமுக எம்.எல்.ஏ சந்திரகுமார் சட்டப்பேரவையில் பங்கேற்க முதல்முறையாக வருகை தந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்