மக்கள் என்ன குஜராத் முதலாளிகளா பதற்றப்படாமல் இருப்பதற்கு? என பீட்டர் அல்போன்ஸ் கேள்வி.
கடந்த 19-ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று முதல் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதற்கிடையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் மக்கள் பதற்றம் அடையவேண்டாம் என ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘2000 நோட்டு செப்டம்பர் 30 க்கு பின்னர் செல்லாது என அறிவித்த ரிசர்வு வங்கி ஆளுநர் தற்போது மக்கள் பதற்றம் அடையவேண்டாம் என ஆலோசனை வழங்குகிறார்.. மக்கள் என்ன குஜராத் முதலாளிகளா பதற்றப்படாமல் இருப்பதற்கு? கருப்பை எப்போது வேண்டுமானாலும் வெள்ளையாக்கும் கூட்டுறவு வங்கிகள் அவர்களிடம் இல்லையே!
ஸ்டேட் பாங்க் நோட்டை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை என்று நேற்று அறிவித்தது. இன்று ரிசர்வு வங்கி ₹50000க்கு மேல் ஆதாரும் பான்கார்டும் தேவை என்கிறது. வியாபார நிறுவனங்கள் ₹2000 நோட்டு வாங்குவதில்லை. ரிசர்வு வங்கி ஆளுநரோ செப்டம்பர் 30க்கு பின்னரும் 2000 நோட்டு செல்லும் கரன்ஸியாகவே இருக்கும் என்கிறார். கேலிக்கூத்து. “மக்களை எப்போதும் பதற்றமாகவே வைக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் நம்மை பற்றி சிந்திக்கமாட்டார்கள்”-கோயபல்ஸ்’ என பதிவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…