மார்ச் 2022 வரை மொத்தம் 5,781 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என தமிழக சட்டப்பேரவையில் தகவல்.
தமிழக சட்டப்பேரவையில் சமூக நலன் & மகளிர் உரிமைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பை, சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை அமைச்சர் கீதா ஜீவன் வாசித்தார். அதில், அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளும் திட்டம் மூலம் சுமார் 91.85 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டில் 267 குழந்தைகள் தத்து வழங்கப்பட்டுள்ளனர். பெண் சிசுக்கொலை எனும் தீய பழக்கத்தை தடுக்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மார்ச் 2022 வரை மொத்தம் 5,781 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், மூத்த குடிமக்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. 2031ம் ஆண்டில் மாநிலத்திலுள்ள மூத்த குடிமக்களின் விழுக்காடு 18.20% ஆக உயரும்போது எண்ணிக்கை 1.50 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்புக்கான அரசின் உதவி எண்கள் என்னென்ன? என்பது குறித்தும் அறிவிக்கப்பட்டது. அதாவது, குழந்தைகளுக்கான உதவி எண் – 1098, மகளிருக்கான உதவி எண் – 181, முதியோருக்கான உதவி எண் – 14567, இணையதள குற்றத் தடுப்புக்கான உதவி எண் – 1930 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என விளக்க குறிப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…