புயலால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன ?மத்திய குழு இன்று ஆய்வு
சென்னையில் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இன்று மத்திய குழு ஆய்வு செய்கிறது.
தமிழகத்தில் நிவர் புயலால் சேதமானவை விவரங்களை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது.அதன்படி,நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.நேற்று தமிழகத்தில் நிவர் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தடைந்தது.தமிழகத்தில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளது மத்திய குழு.புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே இன்று சென்னையில் புயல், வெள்ள பாதிப்பு குறித்து வேளச்சேரி ராம்நகர், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி சுனாமி காலனி பகுதிகள் மற்றும் நூக்கம்பாளையம் பாலம் முதல் சுனாமி காலனி பகுதி வரை மத்திய குழு ஆய்வு செய்கிறது.