நாளை வாக்குப்பதிவு.. தேவையான ஆவணங்கள் என்னென்ன?- தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் வாக்களிக்க பயன்படுத்தக் கூடிய ஆவணங்கள் குறித்த விவரங்களை தமிழக தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18,28,727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6,26,67,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
இந்த தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் மக்கள் சிரமின்றி வாக்களிக்கவும், அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசார், துணை ராணுவத்தினர் உள்ளிட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்நிலையில், வாக்காளர்கள் வாக்களிக்க பயன்படுத்தக் கூடிய ஆவணங்கள் குறித்த விவரங்களை தமிழக தலைமை தேர்தல் ஆணையம், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ஓட்டுநர் உரிமம், கடவுச் சீட்டு, மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, பாராளுமன்ற, சட்டமன்ற பேரவை, சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை உள்ளிட்டவையும்,
நாளை (ஏப்ரல் 06) தேர்தல் நாளன்று வாக்குகளை செலுத்த, இந்த அடையாள சான்றுகளை பயன்படுத்தலாம்.#UngalLikeUngalVakkurudhi #TNElections2021 #AssemblyElections2021 #TamilNaduElections2021 #TNPeople #VotingRights #TamilNadu #GoVote #Voting #Voters #VoterAwareness #VoterID #Proof pic.twitter.com/qoPGqd2lou
— TN Elections CEO (@TNelectionsCEO) April 5, 2021
அரசு பணியாளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓய்வூதிய ஆவணம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை (வோட்டர் ஐடி) ஸ்மார்ட் கார்டு, கணக்கு புத்தகங்கள் (வங்கி, அஞ்சலங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை), மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை அரசு உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வாக்குச்சாவடிக்கு எடுத்துச்சென்றால் மட்டுமே வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஏப்ரல் 06) தேர்தல் நாளன்று வாக்குகளை செலுத்த, இந்த அடையாள சான்றுகளை பயன்படுத்தலாம்.#UngalLikeUngalVakkurudhi #TNElections2021 #AssemblyElections2021 #TamilNaduElections2021 #TNPeople #VotingRights #TamilNadu #GoVote #Voting #Voters #VoterAwareness #VoterID #Proof pic.twitter.com/F9vNHzJcQ0
— TN Elections CEO (@TNelectionsCEO) April 5, 2021
மேலும், பூத் சீட் இல்லாவிட்டாலும் ஸ்லிப்-ல் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, வாக்காளரின் பாதுகாப்பிற்காக முகக்கவசங்கள், கையுறைகள் வாக்குச்சாவடியில் வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஏப்ரல் 06) தேர்தல் நாளன்று வாக்குகளை செலுத்த, இந்த அடையாள சான்றுகளை பயன்படுத்தலாம்.#UngalLikeUngalVakkurudhi #TNElections2021 #AssemblyElections2021 #TamilNaduElections2021 #TNPeople #VotingRights #TamilNadu #GoVote #Voting #Voters #VoterAwareness #VoterID #Proof pic.twitter.com/Yzv38SDSRu
— TN Elections CEO (@TNelectionsCEO) April 5, 2021