முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் வசம் உள்ள துறைகள் என்னென்ன.?
தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வசம் என்னென்ன துறைகள் உள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல்வர் பதவியேற்கவுள்ள நிலையில், மு.க.ஸ்டாலினுடன் பொறுப்பேற்கவுள்ள 34 பேர் கொண்ட அமைச்சர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியானது.
இந்த நிலையில், பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத்திறனாளிகள் நலன் ஆகிய துறைகள் முதல்வராக பெறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் வசம் உள்ளது.