திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எது? விபரம் இன்று வெளியாகும் – கே.எஸ்.அழகிரி
- எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து காங்கிரஸ் – திமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- மக்களவை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக, காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2, இந்திய கம்யூனிஸ்ட் – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இல்லை என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது தொடர்பாக திமுகவுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தையில், மக்களவை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக, காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியது. ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலின் – கே.எஸ்.அழகிரி கையெழுத்திட்டனர்.
ஏற்கனவே புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு முடிவான நிலையில் மீதியுள்ள 9 தொகுதிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
இதன் பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், திமுகவுடனான தொகுதி பங்கீடு என்பது சுமூகமாக முடிவு பெற்றுள்ளது. போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம் இன்று வெளியாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.