நாளை வி.சாலையில் தவெக மாநாடு.. என்னென்ன ஏற்பாடுகள் வசதிகள்?
மாநாடு நடைபெறும் இடத்தில் தவெக நிர்வாகிகளுக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுகிறது. மாநாடு நாளை நடைபெறும் நிலையில், ஒரு பக்கம் தவெக நிர்வாகிகள் நேற்று மாலை முதலே குவிய தொடங்கினர்.
மறுபக்கம், பாதுகாப்புக்காகக் குவியும் காவல்துறை அதிகாரிகள். ஆம், மாநாட்டின் பாதுகாப்பிற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தனியார் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்கள் தனித்தனி அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அந்த அணிகள் எந்த பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு சம்மந்தப்பட்ட இடத்திற்கு அருகில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்த வகையில், மாநாடு நடைபெறும் இடத்தில் தவெக நிர்வாகிகளுக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
வசதிகள்
- மாநாட்டு திடலில் பொதுமக்கள் அமர 50,000 இருக்கைகள் உள்ளது. கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க 48 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கூட்டம் அதிகரித்தால் வெளியே நின்று காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு அரங்கிலும் 2 குடிநீர் டேங்குகள் வைக்கப்பட்டுள்ளது. தொண்டர்களின் வசதிக்கு ஏற்றார் போல், திடலை சுற்றி 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஆங்காங்கே குடிநீர் டேங்குகள் வைக்கப்பட்டுள்ளது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தயார் நிலையில் 150 மருத்துவர்களும், 150 மருத்துவ பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். மேல் சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல 20 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படவுள்ளது.
- குறிப்பாக, கடும் வெயிலால் நீர்ச்சத்து குறைந்தால் குளுக்கோஸ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. தொண்டர்கள் தொப்பி அல்லது குடை எடுத்து வர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
- மேலும், திடலை சுற்றி 600 நடமாடும் கழிப்பறைகள் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திடலை ஒட்டியுள்ள சாலைகளில் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின் விளக்குகள் பொருத்துப்பட்டுள்ளது.
- மாநாட்டுக்கு வருபவர்கள் நிகழ்ச்சிகளை எளிதாக கண்டுகளிக்க 72 எல்இடி திரைகள், மாநாட்டிற்காக மொத்தம் 20,000 மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- வாகனங்களை நிறுத்த 200 ஏக்கர் பரப்பில் 4 பார்க்கிங் மைதானங்களும், பார்க்கிங் முதல் மாநாடு வரை 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்கவுள்ளனர்.
- அதேநேரம், கூட்ட நெரிசலை கண்காணித்து ஒழுங்குபடுத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்தவித திருவிழா மற்றும் மாநாட்டில் இல்லாதது போல், தகவல் தொடர்பு எளிதாக கிடைப்பதற்கு பிரத்யேகமாக ஒரு மொபைல் டவரும் அமைக்கப்பட்டுள்ளது.
- காவல் துறையினரின் வழக்கமான பாதுகாப்போடு தனியார் தன்னார்வலர்கள் 15,000 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
- பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், பாதுகாப்பு கருதி திடலுக்குள் உணவு விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, உணவு அருந்தி விட்டு வரவேண்டும், அல்லது பார்சல் கொண்டு வர வேண்டும்.