ஒரு படத்திற்கு ரூ.50 கோடி வாங்கும் நடிகர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள்…!முதலமைச்சர் பழனிசாமி சாடல்

Default Image

18 தொகுதிகளிலும் மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றது  என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், அதிமுகவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டியவர் தினகரன் தான்.பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த போது , அது மதவாதக் கட்சி என திமுகவுக்கு தெரியவில்லையா? என்றும்  பாலாறு தடுப்பணை பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவை சந்திக்கும் போது இது குறித்து ஏதேனும் பேசினாரா? கேள்வி எழுப்பியுள்ளார்.அதேபோல்  தலைமை செயலக வழக்கில் திமுக தடை ஆணை கேட்பது ஏன்? மடியில் கனம் இல்லை என்றால் தைரியமாக வழக்கை எதிர்கொள்ள வேண்டியது தானே? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.  தமிழக அரசுக்கு தேவையான திட்டங்களை பெறுவதற்காக மத்திய அரசோடு இணக்கமாக உள்ளோம்.மேலும் தொண்டர்களோடு சேர்ந்து பொதுமக்களும் போராடியதால் தான் சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கினார்கள். தலைவர்களின் திட்டங்களை கொச்சைப்படுத்தினால், தொண்டர்கள் கொதித்து எழத்தான் செய்வார்கள்.சினிமா டிக்கெட் கட்டணம் கூடுதலாக வசூலித்தால் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.ரூ.300 கோடி, ரூ.500 கோடி முதலீடு செய்து திரைப்படம் எடுப்பவர்களுக்கு பணம் எங்கிருந்து வந்தது?  கேள்வி எழுப்பியுள்ளார்.சில நடிகர்கள் தங்களை வளமாக்கி கொள்ள திட்டமிட்டு தவறான கருத்துக்களை பரப்புகின்றனர்.ஒரு படத்திற்கு ரூ.50 கோடி வாங்கும் நடிகர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.அரசியலில் கமலின் நடிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தனது படத்திற்கு பிரச்சினை வந்தபோது நாட்டை விட்டு வெளியேறுவேன் என கூறிய கமல், எப்படி மக்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பார்?என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது, இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை. காய்ச்சல் வந்ததும் அரசு மருத்துவமனையை அணுகினால், நிச்சயம் டெங்குவை கட்டுப்படுத்தலாம் என்றும்  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்