சட்டப்பேரவை தேர்தலில் விசிக போட்டியிடும் 6 தொகுதிகள் என்னென்ன.?
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளின் பெயர்கள் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் கடந்த ஒரு வாரமாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவடைந்து, ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகள் மற்றும் ஒரு கன்னியாகுமரி மக்களவை சீட்டு, விசிக 6, மதிமுக 6, சிபிஐ 6, சிபிஎம் 6, ஐயூஎம்எல் 3, கொ.ம.தே.க. 3, ம.ம.க. 2, த.வா.க. 1, ம.வி.க. 1, ஆதித்தமிழர் பேரவை 1 ஆகிய 60 தொகுதிகளை திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, காட்டுமன்னார்கோவில், உளுந்தூர்பேட்டை, குன்னம், செய்யூர், பொன்னேரி, மற்றும் வானுரில் விசிக போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமாக இன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில், கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் அழைத்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. முழு தொகுதி பட்டியல் இன்று பிற்பகல் வெளியாகும் என கூறப்படுகிறது.