குற்ற வழக்குகள் கொண்ட பாஜக எம்பிகள் குறித்து பிரதமரிடம் கேட்க அமித்ஷாவுக்கு தைரியம் உண்டா? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் மு க ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், 234 தொகுதிகளிலும் திராவிடமாடல் பயிற்சி பாசறையை நடத்தியது உதயநிதியின் சாதனை. நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒற்றை செங்கலை காட்டி பரப்புரை செய்தவர் உதயநிதி. இளைஞரணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து திமுகவை உதயநிதி பலப்படுத்தி உள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் சுற்றி சுழன்று பணியாற்றினார்.
நீட் எதிர்ப்பு, இந்தி திணிப்புக்கு எதிராக உதயநிதியும், திமுக இளைஞரணியினரும் போராட்டம் நடத்தினர். உதயநிதி கட்சி பணியிலும், ஆட்சி பணியிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இளைஞரணி செயலாளர் உதயநிதியை எடுத்துக்காட்டாக வைத்து செயல்பட வேண்டும். திமுக இளைஞரணி தீர்மானங்களை பார்க்கும் போது மிகுந்த நிம்மதி அடைகிறேன். எதிர்காலத்தின் தலைமைக்கான ஏற்பு தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக, திமுகவை நோக்கி வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. மாணவர்கள், இளைஞர்களிடம் திமுக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. திராவிட இயக்கத்தின் வரலாற்றை இளைஞர்களுக்கு சொல்லித்தர வேண்டும். திராவிட இயக்க வரலாறு மற்றும் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் வாரிசுகள் உருவாக வேண்டும்.
திராவிட இயக்கத்தின் சாதனைகள் அனைவருக்கும் தெரியும். புத்தகங்களை படித்தால் தான் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். கடுமையாக உழைத்ததால் தான் முதலமைச்சராக முன்னேறி உள்ளேன். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்த போது திராவிட கருத்தில் மறைந்துவிடும் என்று எதிர் கட்சிகள் எண்ணின. வாரிசு, வாரிசு என்று ஏன் திரும்ப திரும்ப சொல்கிறேன் என்றால், நம் எதிரி எந்த ஆயுதத்தை எடுக்கிறார்களோ நாமும் அதே ஆயுதத்தை எடுக்க வேண்டும்.
நல்லதை செய்யவிடாமல் திசை திருப்புவோரின் சதிகளில் நாம் சிக்க வேண்டாம். நம் மீதான அவதூறுகளை தடுக்க நமது சாதனைகளை சொல்ல வேண்டும். பதவிகளுக்காக இல்லாமல் கொள்கைகளுக்காக நாம் உழைக்க வேண்டும். இது திராவிடம் மாடல் ஆட்சி.கோடிக்கணக்கான மக்களுக்கு நல்வாழ்க்கை அளித்துள்ளது திராவிடமாடல் ஆட்சி.
இந்தியா என்ற பெயரை கேட்டாலே பிரதமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகனின் நிழற்குடையில் அவர்களின் கருத்தியல் அடையாளமாக நிற்கிறேன்; திராவிட மாடலை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லவே ‘இந்தியா’ கூட்டணி.
திமுகவை விமர்சித்து பேசிய அமித்ஷா,வேறு ஏதாவது புதிதாக சொல்லி இருக்க வேண்டும். பாஜக வாரிசு அரசியல் இல்லையா? எல்லோரும் நாளைக்கு விலகி விடுவார்கள். அமித்ஷா தொடங்கி வைத்தது பாதயாத்திரை அல்ல, அது பாவ யாத்திரை. மணிப்பூருக்கு சென்று ஏன் அமைதி யாத்திரையை தொடங்கி வைக்கவில்லை? குஜராத், மணிப்பூர் கலவரங்களுக்கு பரிகாரம் தேடவே பாஜக பாதயாத்திரை நடத்துகிறது; 2014-ல் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சவை அழைத்தவர்கள், இலங்கை பிரச்னை குறித்து பேசலாமா?
பாஜக தங்கள் அரசியல் எதிரிகளை சலவை செய்யும் வாஷிங் மிஷினாக, அமலாக்கத்துறையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. குற்ற வழக்குகள் கொண்ட பாஜக எம்பிகள் குறித்து பிரதமரிடம் கேட்க அமித்ஷாவுக்கு தைரியம் உண்டா? குற்ற பின்னணி உள்ளவர்கள் தான் பாஜக அரசின் அமைச்சரவையில் உள்ளனர். மத்திய அரசின் ஆட்டம் எல்லாம் இன்னும் சில மாதங்கள் தான். இந்தியாவுக்கு விடியல் வரப்போகிறது. அதற்கு இந்தியாவுக்கு வாக்களிக்க வேண்டும்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…