தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காவிரி மேலாண்மை வாரியம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்புகையில், இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பின்னர் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் திண்டுக்கல் சென்றனர். அங்கு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி விவகாரத்தில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்து விட்டு உடனே புறப்பட்டார்.