ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர்.!
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் ரூ.15.91 கோடி மதிப்பிலான 20 முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்த முதல்வர் பழனிசாமி.
தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் ரூ.15.91 கோடி மதிப்பிலான 20 முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, ரூ.69.90 கோடி மதிப்பிலான 117 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆகியோருடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (20.08.2020) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். pic.twitter.com/heZDwmHKRZ
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 20, 2020