வைகை ஆற்றுக்கு வந்த தண்ணீர் – மலர்த் தூவி வரவேற்ற மக்கள்.!

வைகை வந்த தண்ணீரை மலர்த்தூவி, பாடல் பாடி வரவேற்ற பொதுமக்கள்.
மதுரை மாவட்டத்தில் கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றிற்கு வந்த தண்ணீரை மக்கள் மலர்த்தூவி, பாடல் பாடியும் வரவேற்றனர். கோடை வெயில் துவங்கியிருக்கும் நிலையில், நேற்று முன்தினம் முதல் 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் வந்தடைந்தது.
இந்த வைகை ஆற்றில் வந்திருக்க கூடிய தண்ணீரை வரவேற்பதற்காக மதுரை பொதுமக்கள் வைகை ஆற்றில் தண்ணீரில் மலர்தூவியும், வைகை ஆற்றை போற்றி பாடல் பாடியும் வரவேற்றனர். ஒவ்வொரு முறையும் வைகை ஆற்றில் தண்ணீர் வரும்போதும், இதுபோன்று நிகழ்வுகளை கடைபிடிப்பது வழக்கமாக கொண்டிருக்கக்கூடிய நிலையில் தான் இன்றும் அதேபோன்று தண்ணீரை வரவேற்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025