ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், மதக்கலவரத்தை தூண்டுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்ற ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.