கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்கிறோம்… வாழ்த்துகிறோம் என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, 2026 சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களை பெற்று தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என என அண்ணாமலை கூறி இருப்பது அவரது ஆசை, விருப்பம். ஒருவரின் ஆசையை நாம் நிராகரிக்க முடியுமா ..? ஆனால் எப்போது தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் அதிமுக வெற்றிபெறும் என்பதற்கு சான்று இது. பாஜக ஒரு வளர்கின்ற கட்சி, பாஜகவினர் தங்கள் கட்சி வளர எதிர்க்கட்சி என சொல்லிக்கொள்வார்கள்.
மக்களின் பேராதரவோடு அதிமுக தான் எதிர்க்கட்சியாக தமிழகத்தில் உள்ளது. பணபலம், அதிகார பலம் 2-வது பட்சம் மக்கள் பலம் தான் முக்கியம். ஒரு தேர்தலில் ஜனநாயகத்தை நிலைநாட்ட மக்கள் விரும்பி வாக்களிக்க வேண்டும். ஜனநாயக அடைப்படையில் தேர்தல் நடைபெற வேண்டும். எந்தவிதமான அதிகார துஷ்பிரயோகம் இல்லாமல் தேர்தலை முதல்வர் நடத்துவர் என நினைக்கிறோம். தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம் என தெரிவித்தார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…