இந்திய தொல்லியல் துறை வரவேற்பும் எதிர்பார்ப்பும் -சு.வெங்கடேசன் எம்.பி

Default Image

இந்தியத் தொல்லியல் துறையின் இந்த அறிவிப்பை வரவேற்கிறேன் என்று  மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும்  பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் :

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் இயங்கி வருகிறது.இந்த நிறுவனம் மத்திய அரசின் கீழ் இயங்கி வருகின்றது.

சமீபத்தில் வெளியான அறிவிப்பு :

சமீபத்தில் இந்த நிறுவனம் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தது.அந்த விளம்பரத்தில், முதுகலைப் பட்டம் பெற்று இருப்பவர்கள் தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்பிறகு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இடம்பெறாததற்கு எதிர்ப்பு : 

குறிப்பிட்ட முதுகலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.அதாவது    தொல்லியல்துறை,இந்திய வரலாறு மற்றும் இந்திய வரலாறு  மற்றும் செம்மொழிகளான சம்ஸ்கிருதம், பிராகிருதம் , அரபு,பாலி மொழிகளில்  பட்டம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்பிற்கான  கல்வித் தகுதியில், செம்மொழி வரிசையில் தமிழ் இல்லை என்று தமிழக அரசியல் கட்சினர்,அறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.மேலும் , உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் இதுதொடர்பாக முறையீடும்  செய்யப்பட்டது.

எதிர்ப்புக்கு பின் தமிழ் மொழிக்கு அனுமதி : 

இதன் பின் மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி மத்திய அரசின் மத்திய தொல்லியல்துறை உத்தரவிட்டது.மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி வழங்கி மத்திய தொல்லியல்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், தமிழ், கன்னடம், மலையாளம், ஒடிஷா உள்ளிட்ட 10 மொழிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி. சு.வெங்கடேசன் வரவேற்பு :

இந்நிலையில் இது குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இந்தியத் தொல்லியல் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பட்டயப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகள் அனைத்தையும் சேர்த்துள்ளது.இந்தியத் தொல்லியல் துறையின் இந்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்தியத் தொல்லியல் துறைக்குள் நுழையும் வாசலிலேயே தமிழ் மாணவனை தகுதி இழக்கச்செய்யும் அநீதிக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது சமஸ்கிருதம் அல்லாத பிற செம்மொழிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போக்க தமிழகமே உரத்துக் குரல்கொடுத்தது.

இந்தியத்தொல்லியல் துறை தனது விடாப்பிடியான இறுக்கத்தைத் தளர்த்தி மறுஅறிவிப்பு செய்ததைப் போல, ”இந்திய பண்பாட்டின் தோற்றத்தையும் பரிமாணத்தையும்” ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழுவினைக் கலைக்கும் அறிவிப்பினையும் விரைவில் வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்