உயிரிழந்த தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம் என கனிமொழி எம்.பி ட்வீட்.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக,கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்நிலையில்,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடியில் தங்கள் மண்ணுக்காகவும், காற்றுக்காகவும், தண்ணீருக்காகவும் போராடிய அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத்தின் கருப்பு நாள் இது. பாதிக்கப்பட்ட மக்களோடு என்றும் உடனிருப்பேன் என நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துணை நின்று ஆறுதல் தந்துகொண்டிருக்கிறார்.
வளர்ச்சி என்ற பெயரில், சுற்றுப்புறச்சூழலையும், எதிர்காலத் தலைமுறையையும் பாதிக்கக் கூடிய எதையும் அனுமதிக்க மாட்டோம் என்று இந்நாளில் உறுதி ஏற்றுக்கொள்வோம். உயிரிழந்த தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …