நெல்லை மக்கள் கவனத்திற்கு..! மழைப்பாதிப்பு குறித்து புகாரளிக்க இணையதளம் அறிமுகம்..!
நெல்லை மாவட்டத்தில் மழை, வெல்ல பாதிப்பு பற்றி போட்டோவுடன் புகார் கூற நெல்லை மாவட்ட நிர்வாகம் இணையதள பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சமீப காலமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதுடன், ஏரிகள், அணைகளும் நிரம்பி வருகிறது.
அந்த வகையில் நெல்லையை பொறுத்தவரையில் கடன் சில நாட்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் மழை, வெல்ல பாதிப்பு பற்றி போட்டோவுடன் புகார் கூற நெல்லை மாவட்ட நிர்வாகம் இணையதள பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, nellaineervalam.in/waterlogging-ல் புகாரளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.