நிவார் புயல்: “மரங்களை வெட்ட வேண்டாம்” – தமிழ்நாடு வெதர்மேன் வேண்டுகோள்!
நிவார் புயல் எதிரொலியால் மரங்களை மக்கள் மரங்களை வெட்டுவதால், மரங்களை வெட்ட வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிவார் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்க கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு மையம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 100 – 120 கீ.மி. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த புயலால் நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, தென்காசி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புக்கள் கம்மி எனவும், டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூரில் தென்னை மரங்களை வெட்டுவதாக தெரிவித்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், காற்றின் திசை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் எனவும், எனவே யாரும் மரங்களை வெட்ட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.