சென்னை :சென்னையில் பல பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை உடனே நிற்க வாய்ப்பில்லை என்கிறார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “மேகங்கள் சிறிதளவு கூட பலவீனமடைவதாகத் தெரியவில்லை. அவை மேலும் மேலும் ஒன்றிணைந்து அசைவின்றி நிற்கின்றன. இது யாரையும் பதற்றப்படுத்துவதற்காக அல்ல. மழையில் இடைவெளி இருக்காது போல் தெரிகிறது.
அதிக மழை பெய்ய உள்ளதால் அலுவலகத்திற்கு வந்தவர்கள் சீக்கிரம் வீட்டிற்கு செல்லுங்கள். அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும். மழை உடனே நிற்க வாய்ப்பில்லை என்பதால், இன்று அலுவலகத்துக்கு சென்றிருப்பவர்கள் மாலை முன்னதாகவே வீடு திரும்புவது பாதுகாப்பானது.
சென்னையில் ஏற்கெனவே 20 செமீ அளவுக்கு மழை பெய்துள்ள நிலையில், நாளை இன்னும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று இரவு முதல் சில இடங்களில் 200 மி.மீ வரை மழை பதிவாக வாய்ப்புள்ளது” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
unknown node