வானிலை அப்டேட் : தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் சில இடங்களில் கனமழை வரை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.
ஏற்கனவே இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டிசம்பர் 16ஆம் தேதி வரையில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், இன்று பகல் 1 மணி வரையிலான மழை அப்டேட் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும்,
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் குறிப்பிட்ட லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.