# இடியுடன் மழை# 10 மாவட்ட மக்களுக்கு அறிவிப்பு!
10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் :
வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறாக கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகெங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் உள் மற்றும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழைப் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது,