கொடூர உக்கிரத்தால் ஒரே நாளில் 56 பேரை கொன்ற வெயில்..!
இந்தியா முழுவதும் கோடை வெயில் கொழுத்தி வருகின்றது.மேலும் தமிழ்நாட்டில் அதன் தாக்கம் கடுமையாக இருந்தது இதன் காரணாமாக மக்கள் தவித்து வருகின்றனர்.மேலும் இந்தாண்டு கடுமையான வறட்சி மற்றும் போதிய மழை இல்லாத காரணத்தால் ஏரி மற்றும் அணைகளில் தண்ணீர் வற்றி வறண்டு கிடைக்கும் அவலம் இதனால் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி காலி குடங்களோடு தண்ணீருக்கு தலைநகரம் அலைந்து திரிகின்றது.
இப்படி தண்ணீர் ஒருபக்கம் தவிக்க விடுகிறது என்றால் மறுபக்கம் கொடூரமாக அடிக்கும் கோடை வெயில் இதற்கு மட்டும் நாடு முழுவதும் ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.