தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்குகான வானிலை முன்னறிவிப்பு..!
இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை வாய்ப்பு.
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான /மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தென் தமிழகம், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
25-ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை,தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
26-ஆம் தேதி தென் தமிழகம், புதுக்கோட்டை, கஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.
27-ஆம் தேதி தென் தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிகு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.