மீனவர்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்!வானிலை மையம் எச்சரிக்கை…மழை பெய்ய வாய்ப்பு?
வானிலை மையம், குமரிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், கன்னியாகுமரி, மன்னார் வளைகுடா, தென் கேரள கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை, மாலத்தீவுகள் அருகே நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 40ல் இருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கன்னியாகுமரி , மன்னார் வளைகுடா, தெற்கு கேரள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அரபிக் கடலில் 156 படகுகளில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இருப்பதாக பேரிடர் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். அவர்களை கரைசேர்க்க விமானப்படைக்கு தகவல் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். கேரள கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் 3 நாட்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் சத்யகோபால் கேட்டுக் கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.