தென்மாவட்டங்களில் பெய்துவரும் மழை குறையும்!
இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுக்குறையும் என்றும், இதனால் தென்மாவட்டங்களில் பெய்துவரும் மழையும் குறையும் என தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் நேற்று, கன்னியாகுமரி மற்றும் மினிக்காய் தீவுகள் அருகே நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று தென் கிழக்கு அரபிக்கடல்,மினிக்காய் தீவில் இருந்து தென் கிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்துக்கு அதே நிலையில் நீடிக்கும் என்றும், அதன்பின்னர் வலுக்குறைந்து, கிழக்கு மத்திய அரபிக்கடல் நோக்கி நகரும் என்றும் கூறியுள்ளது. இதனால், குமரியை ஒட்டிய கடல்பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்றும் வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றத்தால் தென் மாவட்டங்களில் பெய்து வரும் மிதமான மழை குறையும் என்றும் மார்ச் மாதத்தில் அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த மண்டலம் உருவாகி நீடிப்பது இதுவே முதன் முறை என்றும் வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.